உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பெண்கள் பலி

கிரீஸ் நாட்டில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பெண்கள் பலியாயினர்.

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிலோபென்னசி பிராந்தியத்தில் கலமாட்டா என்ற நகரம் உள்ளது. இங்கு ஒரு ஓட்டல் இயங்கி வந்தது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் பலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

அதனை தொடர்ந்து ஓட்டல் முழுவதும் தீ பரவியது. இதனால் பீதியடைந்தவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறினர். எனினும் இந்த கோர விபத்தில் ஓட்டலின் பெண் ஊழியர்கள் 2 பேர் மற்றும் ஓட்டல் உரிமையாளரின் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

SCROLL FOR NEXT