உலக செய்திகள்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உள்பட 3 பேர் காயம்

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4-வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

2 அல்லது 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 பேரும் அப்பாவிகள் எனவும் போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அனைவருக்கும் காலில் தான் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...