உலக செய்திகள்

இங்கிலாந்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயம்

இங்கிலாந்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பி.பி.சி. ஊடக பணியாளர் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சியான சாம் கிளாக் (வயது 38) என்பவர் கூறும்பொழுது, மற்ற நாடுகள் மீது நீங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறினார் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்