Image Courtesy : Twitter Tim Cook 
உலக செய்திகள்

தமிழக மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்..!

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மாணவர்களை பாராட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினியில் எடுத்த புகைப்படங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் இடம்பெற்றுள்ளது.

"தங்கள் சமூகங்களின் அதிர்வு" குறித்து இந்த மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் "லேண்ட் ஆப் ஸ்டோரீஸ் " (A Land of Stories) என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சிக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்த 40 மாணவர்களை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினியில் தங்கள் சமூகங்களின் அதிர்வு குறித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.. இப்போது, அவர்களின் படைப்புகள் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் இடம்பெற்றுள்ளன என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் மாணவர்கள் எடுத்த இரண்டு படங்களையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்