இதை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது. அதன்பேரில், மரண தண்டனை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று, குல்பூஷண் ஜாதவ் மீதான மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரும் வழக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விசாரிக்க தொடங்கியது. ஆனால், இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை. ஜாதவுக்கு வக்கீலையும் நியமிக்கவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், இந்த கோர்ட்டில் ஆஜராவது இறையாண்மை உரிமையை விட்டுக்கொடுப்பதாக அர்த்தம் ஆகாது என்றும் இந்தியாவுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.