உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகும்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோ,

சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்ந்து உள்ளது. சீனா உள்பட உலகம் முழுவதும் 80,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென் கொரியாவில் இப்போது 1,140 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலியில் 320 க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஈரான் 90 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கபட்டு உள்ளனர். மேலும் 15 பேர் கொரோனா வைரசால் பலியாகி உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளும் அமெரிக்க நிபுணர்களும் கொரோனா வைரஸ் நோயை ஒரு தொற்றுநோயாக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இப்போது அதற்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி உள்ளனர்.

கொரோனா வைரஸ் மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு உறுப்பினர் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்