உலக செய்திகள்

ஹைதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,297 -ஆக உயர்வு

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹைதி,

வட அமெரிக்க கண்டத்தின் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான ஹைதியின் தெற்மேற்கு பகுதியில், நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான லெஸ் கெயஸ் குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். நகரம் முழுதும் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1,297ஆக அதிகரித்துள்ளது. 2,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து 1 மாத காலத்திற்கு அவசர கால நிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி பிரகடனப் படுத்தியுள்ளார்.