உலக செய்திகள்

உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபட்டு இருந்த ரஷிய பாதுகாப்பு அதிகாரி தற்கொலை

உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபட்டு இருந்த ரஷிய பாதுகாப்பு அதிகாரி 16வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

மாஸ்கோ:

ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை பதவி வகித்த பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினா (58), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16வது மாடியில் விழுந்து உயிரிழந்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் மெரினா யாங்கினாவின் உடலை பொதுமக்கள் பார்த்தனர். தகவலறிந்த போலீசார் மரினா யாங்கினாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் உடனான ரஷியப் போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரிமா யாங்கினா செயல்படுத்தி வந்தார். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் ஏற்கனவே ரஷிய அதிபர் விளாடிமிர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் மகரோவ், சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல் பல முக்கிய பிரபலங்கள் மர்மமாக இறந்துள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...