உலக செய்திகள்

வர்த்தக போர் தொடங்கியது:சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க கூடுதல் வரி விதிப்பு இன்று முதல்அமல்

சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் தொடங்கியது சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது.

தினத்தந்தி

வாஷிங்டன்

சீனாவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார் வரி விதிப்பின் முதல் சுற்று இன்று முதல் அமலாகிறது.

இதே நாளில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதித்து நிலைமையை சீனா சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி பொருட்களுக்கான இந்த கூடுதல் வரி விதிப்பு, உலகின் மிகப் பெரிய இரு பொருளாதார நாடுகளுக்கு இடையில் பெரும் வர்த்தக போரை உருவாக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்த வர்த்தக போர் உலக பங்குச்சந்தைகளில் கொந்தளிப்பை உருவாக்கி, உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்