உலக செய்திகள்

லெபனானில் பயிற்சி விமானம் விபத்து - 3 பேர் உயிரிழந்ததாக தகவல்

லெபனானில் பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

பெய்ரூட்,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ள கேசர்வான் மாகாணம், மலைப்பகுதிகளை கொண்டது ஆகும். இந்த பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று இன்றைய தினம் விபத்திற்குள்ளானது.

உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம், 20 நிமிடங்களில் தரைக்கட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பை இழந்துள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி மற்றும் 2 பயணிகள் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 பேரும் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில் இன்று வானிலை மேகமூட்டத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை