உலக செய்திகள்

பயணத்தடை நீக்கம்: மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாட்டு பயணிகள் வருகை

ஓமன் விமான நிலையங்களின் துணைத்தலைவர் சவுத் பின் நாசர் அல் ஹுபைஷி கூறியதாவது:-

தினத்தந்தி

ஓமனில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த பயணத்தடையானது நேற்று முதல் நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முதல் பயணிகள் வருகை தொடங்கியது.இந்த புனித நாளில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் முழு செயல்பாடுகளுக்கு திரும்பும் நிலையில் உள்ளது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக அனைவரிடமும் ஒரு ஏக்கம் இருந்தது. இன்று அது நிறைவேறி உள்ளது.

அனைத்து நாடுகளில் இருந்து ஓமனுக்கு வரும் பயணிகள் மற்றும் குடும்பத்தினரை அன்புடன் வரவேற்கிறோம். தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எங்கள் பணியை தொடர உள்ளோம். ஓமன் விமான நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான திறன்மிக்க அதிகாரிகளுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை