உலக செய்திகள்

ஏப்ரலில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கிறேன் - டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் மிக சிறந்த சந்திப்பை நடத்தினேன் என டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரானுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் அது ஈரானுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அவர்கள் ஒப்பந்தம் செய்யாமல் பிடிவாதம் பிடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நேற்று மிகச்சிறந்த சந்திப்பை நடத்தினேன்.

நான் ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளேன். மேலும் இந்த ஆண்டில் ஜிஜின்பிங் அமெரிக்காவுக்கு வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எனக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டு நாடுகளுக்கு இடையே மிக சிறந்த உறவு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.