ஹாம்பர்க்
இரு நாடுகளுக்குமிடையிலான உறவு சாதமாக இருக்கும் என்பதை தான் எதிர்ப்பார்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் இருவரும் பல விஷயங்களை விவாதித்தோம். பேச்சுக்கள் நன்றாக போனது என்று புடின் அருகில் அமர்ந்தவாறு டிரம்ப் தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். தனது பதிலில் தொலைபேசியில் டிரம்புடன் பேசியுள்ளதாகவும், அப்பேச்சுக்கள் போதாது என்பதால் அவர்களின் சந்திப்பு இருதரப்பு உறவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்றார். தனிப்பட்ட முறையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் டிரம்பிடம் புடின் தெரிவித்தார்.