உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டிய அவர், தற்போது தனது கவனத்தை தேர்தல் மீது திருப்பியுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்யப் போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.சில சந்தர்ப்பங்களைத் தவிர, வாக்காளர்கள் ஓட்டளிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும். மெயிலில் இனி வாக்குச் சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்குச் சீட்டு முறையில் ஓட்டளிக்கக் கூடாது.இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசுக் கட்சியினரும் பின்பற்றுவதற்காக போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.