வாஷிங்டன்
டிரம்ப்பின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்துக்கும் ரஷ்யாவுக்குமிடையே தொடர்புள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து ராபர்ட் முல்லர் தலைமையில் ஒரு குழு விசாரித்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, 2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது.
இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.