உலக செய்திகள்

வடகொரியாவில் கொடிய சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது: டிரம்ப் பேச்சு

வடகொரியாவில் கொடிய சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது என தென்கொரிய பாராளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 12 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று தென்கொரியாவுக்கு சென்றார். இந்த பயணத்தில் வடகொரியாவின் அணு ஆயுத விவகாரம் மற்றும் அமெரிக்கா-தென்கொரியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்தப்படும் என கூறப்பட்டது.

அவர் நேற்று மாலை தென்கொரியாவில் அமைந்துள்ள படை தளத்தினை பார்வையிட்டார். இந்நிலையில் இன்று காலை வட மற்றும் தென் கொரியா இடையே அமைந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு முன்னறிவிப்பின்றி டிரம்ப் மேற்கொள்ள இருந்த பயணம் மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து டிரம்ப் தென்கொரிய பாராளுமன்றத்தில் இன்று பேசினார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் பல உலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன. அதற்கு ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் வந்தன. ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்.

இதனால் அந்நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கிம் அமெரிக்காவின் மைய பகுதியை தாக்கும் வல்லமை கொண்ட ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன என அச்சுறுத்தினார்.

இந்நிலையில், தென்கொரியாவின் பாராளுமன்றத்தில் பேசிய டிரம்ப், நீங்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருவதில்லை என கிம் ஜாங்கிற்கு நேரடியாக செய்தி சொல்வது போல் கூறினார். தொடர்ந்து அவர், அந்த ஆயுதங்கள் உங்களது ஆட்சிக்கு ஆபத்தினை விளைவிப்பவை. இந்த இருண்ட பாதையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நீங்கள் சந்திக்கும் ஆபத்தினை அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.

வடகொரியாவை கொடிய சர்வதிகார நாடு என குறிப்பிட்ட டிரம்ப், ஒரு மிக சிறந்த எதிர்காலத்தினை நோக்கிய பாதையை வடகொரியாவுக்கு நாங்கள் வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்