வாஷிங்டன்
மணீஷா சிங் எனும் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் அமெரிக்க பொருளாதார ராஜதந்திர விவகாரங்களில் பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது. தற்போது மணீஷா செனட்டர் டான் சல்லிவன் அலுவலகத்தில் மூத்த கொள்கை வகுப்பு ஆலோசகராக பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.
ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 45 வயதாகும் மணீஷா செனட் அயல்நாட்டு உறவுகள் கமிட்டியில் உயர் பதவி ஒன்றில் பணியாற்றி வந்தவராவார், மணீஷாவின் பெற்றோர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்; அவர்களுடன் சிறுவயதிலேயே மணீஷா அமெரிக்காவிற்கு வந்துவிட்டார்.