உலக செய்திகள்

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இஸ்ரேல் உடன் மத்திய கிழக்கின் இரண்டு முக்கியமான நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் பக்ரைன் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

முன்னதாக இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக், சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான ஐக்கிய அமீரகம் அதில் இணைந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு