வாஷிங்டன்,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமாக, கோல்ப் மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது.
8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சகல வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு விடுதியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஜி-7 மாநாடு நடைபெறும் என கடந்த 17-ந்தேதி வெள்ளை மாளிகை அறிவித்தது.
ஆனால், டிரம்ப் தனது சொந்த லாபத்துக்காக தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி ஜி-7 மாநாட்டை அவரது சொகுசு விடுதியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் வசைபாடினர். டிரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியினர் சிலரும் அவரை விமர்சித்தனர்.
இந்த நிலையில் தொடர் விமர்சனங்களால் ஜி-7 மாநாட்டை மியாமி சொகுசு விடுதியில் நடத்தும் முடிவை டிரம்ப் கைவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்களின் விரோத போக்கு காரணமாக எனது யோசனையை மாற்றியமைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.