உலக செய்திகள்

புதிய கட்சி தொடங்கப் போவதில்லை - முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு

தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புளோரிடா,

புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும் தங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளதென்றும், அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் போலியானது என்று கூறிய அவர், அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும், ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக, அடுத்த தேர்தலில் தோற்கடிக்க தனக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் டிரம்ப் கூறினார்.

முன்னதாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜோபைடனின் தோல்வியை தழுவினார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை