உலக செய்திகள்

பிரதமர் மோடி சிறந்த நபர்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டு

இந்திய பிரதமர் மோடி சிறந்த நபர் என்றும் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்திய பிரதமர் மோடி சிறந்த நபர் என்றும் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் கூறுகையில், " பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது.

நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும். அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது பணி அபாரமானது. இன்றும் அவர் எனக்கு சிறந்த நண்பர் தான். இந்தியாவுக்கு என்னைவிட்ட சிறந்த நண்பர் இருந்ததே இல்லை" என்றார்.