உலக செய்திகள்

கொரோனா விவகாரம்: சீனா உகான் நகரில் என்ன நடந்தது? வலுவான அறிக்கை வெளியிடுவோம்- டிரம்ப்

கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என டிரம்ப் கூறினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:-

கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம். அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இது உலகளாவிய தொற்றுநோயாக மாறுவதற்கு முன்னர் சீனா இந்த நோயின் அளவு மற்றும் ஆபத்து குறித்து உலகை தவறாக வழிநடத்தியது என்பதில் தனக்கு சந்தேகம் இல்லை.

தனிப்பட்ட முறையில், அவர்கள் மிகவும் பயங்கரமான தவறு செய்ததாக நான் நினைக்கிறேன்.அவர்கள் அதை மறைக்க முயன்றனர் என கூறினார்

அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரடியாக விமர்சிக்க டிரம்ப் மறுத்துவிட்டார், அவரை ஒரு வலுவான தலைவர் என்று அழைத்தார்.நான் அவருடன் ஒரு நல்ல உறவைக் கொண்டுள்ளேன் என கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்