உலக செய்திகள்

டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை

டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரை சேர்ந்தவர் மைக்கேல் கெட்லு (வயது 36). இவர் கடந்த ஆண்டு 2018-ம் ஆண்டு மே மாதம் யூடியூப் வீடியோ மூலம் ஜனாதிபதி டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

அந்த வீடியோவில் மைக்கேல் கெட்லு, ஜனாதிபதி டிரம்பை நான் படுகொலை செய்வதற்கு முன்பு அவர் டெக்சாஸ் மாகாணத்துக்கு வருவார் என்று காத்திருக்கிறேன் என பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மைக்கேல் கெட்லுவை டல்லாஸ் நகர போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மைக்கேல் கெட்லுவை குற்றவாளி என டல்லாஸ் கோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். அதன்படி மைக்கேல் கெட்லுவுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு