வாஷிங்டன்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்துங்கும் ஜனாதிபதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுக்கத் தொடங்கினார்.
மலேரியா மருந்தை எடுக்க தொடங்கிய இரண்டு வார காலத்திற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் எந்தவிதமான பக்கவிளைவுகளையும் சந்திக்கவில்லை.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பக்கவிளைவுகளையும், உயிர்பாதிப்புகளையும் கொடுக்கும் என கூறப்பட்ட நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு ஆதரவாக டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னனி கூறியதாவது:-
"ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மிகவும் நம்பிக்கைக்குரிய நோய்த்தடுப்பு மருந்தாக தான் பார்க்கிறேன் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். ஆனால் ஒவ்வொரு நபரும் தங்கள் மருத்துவரிடமிருந்து ஆலோசனை பெறாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கூறி உள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், மற்றொரு உலகத் தலைவரான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, தான் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாகவும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார்.
போல்சனாரோ தனது நாட்டில் இந்த மருந்தை பரவலாகக் கிடைக்கச் செய்துள்ளார்.