உலக செய்திகள்

குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக மீண்டும் டிரம்ப்

குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெற உள்ளது

தினத்தந்தி

கொலம்பியா,

அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், இப்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு முன்பு நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். மீண்டும் அவர் ஜோபைடனை எதிர்த்து போட்டியிட உள்ளார். ஆனால் இதே கட்சியை சேர்ந்தவரான நிக்கி ஹேலி (ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் தூதர்), வேட்பாளர் தேர்வில் போட்டியில் உள்ளார்.

இதுகுறித்து கட்சியின் தலைவரான ரோனா மெக்டேனியல் கூறும்போது, "ஹேலி மிகப்பெரிய பிரசாரத்தை நடத்தியிருந்தாலும், கட்சியினர் எங்கள் இறுதி வேட்பாளரை சுற்றி ஒன்றுபட வேண்டும். அது டொனால்ட் டிரம்பாக இருக்கப்போகிறது" என்று கூறி உள்ளார். இதற்கிடையே குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெற உள்ளது.

அதில் 2024 ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவார் என்று முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்