துனிஸ்,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காபேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உள்பட 3 ராணுவவீரர்கள் இருந்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்தில் இந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடான தொடர்பை இழந்ததோடு, ரேடார் பார்வையிலிருந்தும் மறைந்தது. இதை தொடர்ந்து மயமான அந்த ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதில் மாயமான ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ வீரர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.