உலக செய்திகள்

சிரியாவில் துருக்கி ராணுவம் தாக்குதல்; 11 குர்தீஷ் இன தீவிரவாதிகள் பலி

சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 குர்தீஷ் இன தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

இஸ்தான்புல்,

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு ஊடுருவியுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சிரியாவில் குர்தீஷ் இன தீவிரவாதிகள் கடந்த 1984ம் ஆண்டில் இருந்து ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரில் பொதுமக்களில் 40 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர்.

கடந்த ஜனவரியில், துருக்கி ராணுவம் மற்றும் சிரிய கிளர்ச்சி படை இணைந்து ஆப்ரின் பகுதியில் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில் கடந்த வாரம் ஹதே பகுதியை தனது முழு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சிரியா எல்லையை ஒட்டிய தெற்கு ஹதே பகுதியில் துருக்கி ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 11 குர்தீஷ் இன தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியாவின் ஆப்ரின் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 2 துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டு உள்ளனர் என துருக்கி ராணுவ வட்டார தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது