கோப்புப்படம் 
உலக செய்திகள்

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத்தொடர்ந்து துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 29,058 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32,08,173 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 153 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 31,076 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 29,57,093 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 2,20,004 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்