உலக செய்திகள்

உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்பட ஜெலென்ஸ்கியுடன் துருக்கி அதிபர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை!

துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் உக்ரைனின் நிலைமை குறித்து தொலைபேசியில் உரையாடினர்.

தினத்தந்தி

பிரஸ்ஸல்ஸ்,

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உதவி கோரியதாக கூறியும், பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷியா திடீர் போரை தொடங்கியது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் உக்ரைனின் நிலைமை குறித்து தொலைபேசியில் உரையாடினர். இந்த தகவலை துருக்கி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துருக்கி அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கள நிலைமை மற்றும் பேச்சுவார்த்தையின் நிலை குறித்து இரு தலைவர்களும் நேற்று விவாதித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

நேட்டோ தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, துருக்கி அதிபர் பெல்ஜியம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நேட்டோ அமைப்பின் கூட்டத்தில், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு துருக்கியின் ஆதரவை அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். இந்த செயல்பாட்டில் துருக்கி தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியளர்களிடம் அவர் கூறியதாவது, இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் நான் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

அவரிடம், இப்போது நீங்கள் அமைதிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையின் சிற்பியாக இருக்க வேண்டும் என்று தெரிவிப்பேன்.

மேலும், அவரிடம் உக்ரைனிலிருந்து ரஷியா 'கௌரவமாக வெளியேறுதல்' என்பதை பரிந்துரைப்பதன் மூலம் இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் அவர் பேசுகையில், உக்ரைனும் ரஷியாவும் நான்கு விஷயங்களில் உடன்படிக்கைக்கு நெருக்கமாக இருந்தனர்;-

உக்ரைனின் நடுநிலைமை, பகுதியளவு ஆயுதக் குறைப்பு, பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உக்ரைனில் ரஷிய மொழியின் பயன்பாடு உள்ளிட்ட நான்கு விஷயங்களில் உடன்படிக்கைக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆனால் கிரிமியா மற்றும் டான்பாஸின் எதிர்கால நிலை குறித்த, ரஷியாவின் கோரிக்கைகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான கருத்து வேறுபாடாக தொடர்கின்றன.

ரஷியா மற்றும் உக்ரைன் தலைவர்களை துருக்கியில் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து