உலக செய்திகள்

எலான் மஸ்கின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் டுவிட்டர் நிறுவனம்

எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் விதமாக பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

டுவிட்டரில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வரும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார்.

தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கும் சவுதி அரேபியா இளவரசர் அல்வலீத் இதனை நிராகரித்துவிட்டார். ஆனாலும் நிறுவனத்தை கைப்பற்ற தன்னிடம் மாற்று திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விரோதமான முறையில் நிறுவனத்தை கையகப்படுத்த துடிக்கும் எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் விதமாக பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் எந்தவொரு தனி நபர், நிறுவனம் அல்லது குழுவும் பிரீமியம் செலுத்தாமல், நிறுவனத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை