உலக செய்திகள்

பயனாளர்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு டுவிட்டர் நிறுவனம் வலியுறுத்தல்

பயனாளர்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு டுவிட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. #Twitter #Changepassword

தினத்தந்தி

சான்பிரான்ஸிஸ்கோ,

சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் டுவிட்டர். குறுகிய தகவல்கள் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தும் வசதியை கொண்டுள்ள டுவிட்டர் சமூக வலைதளவாசிகள் மத்தியில் பிரபலமான ஒன்றாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் இந்த நிறுவனனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் இண்டேனல் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சிலரது பாஸ்வேர்டுகள் சேமிக்கப்பட்டதாகவும், இது சில ஊழியர்களுக்கு தெரிந்து இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளது.

இதனால், பயனாளர்கள் 330 மில்லியன் பேரும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு டுவிட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், நடைபெற்ற விசாரணையில், பாஸ்வேர்டுகளை திருடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் டுவிட்டர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு