உலக செய்திகள்

பின்லாந்து: கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் மரணம்; ஆறு பேர் படுகாயம்

பின்லாந்தின் டுர்கூ நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார்; மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

டுர்கூ(பின்லாந்து)

டுர்கூ நகரில் எட்டு பேரை கத்தியால் இருவர் குத்தினர்; அதில் இருவர் மரணமடைந்துள்ளனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர் என்று டிவீட் செய்துள்ளனர். கத்தியால் குத்திய ஒருவரை உடனடியாக காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை கைது செய்தனர்.

குத்தியவர்களின் அடையாளம் இன்னும் நிறுவப்படவில்லை. ஸ்பெயினில் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர். ஸ்பெயின் சம்பவத்திற்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

செண்டரல் டுர்கூ நகரம் தலைநகர் ஹெல்சின்கியிலிருந்து 140 கிலோமீட்டர் (90 மைல்கள்) தூரத்திலுள்ளது. அந்நகரம் தற்போது முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நாடு முழுதும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் யார் நடத்தினர் என்பது தெரியவில்லை. இது தீவிரவாதத் தாக்குதலா என்பதும் தெரியவில்லை. பின்லாந்தின் தேசிய விசாரணை ஆணையம் சம்பவத்தின் காட்சிப் பதிவுகளை ஆராய்ந்து வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் பின்லாந்து முழுவதும் பரவியுள்ளனர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஜிர்கி கேடைனன் இதே டுர்கூ நகரில் நகராட்சி தேர்தலின்போது கத்திக்குத்து சம்பவத்திலிருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்