உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் அமைப்பிடம் சென்றுள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 29ந்தேதி ஆளில்லா விமான தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த சோக சம்பவத்திற்கு அமெரிக்காவின் பென்டகனும் உறுதி செய்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து