பெய்ஜிங்,
சீனாவில் புதிதாக இரண்டு பேருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஹாங்காங் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 68 வயது ஆணுக்கும், ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
முன்னதாக சீனாவில் ஹச்5என்6 எனப்படும் பறவை காய்ச்சல் பரவி வரும்நிலையில், தற்போது மேலும் 2 பேர் பறவைக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டு, அவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆணுக்கு தொற்று எவ்வாறு பரவியது என்று கண்டறிய முடியவில்லை. ஆனால் பெண்ணுக்கு கோழிகளை அழிக்கும்போது வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.