வாஷிங்டன்,
சிரியாவில் உள்ள குர்து போராளிகள் இவர்களை பிடித்து உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2 பேருமே ஜனவரி மாதம், சிரியாவின் கிழக்கு பகுதியில் வைத்து பிடிபட்டதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
பிடிபட்ட 2 பயங்கரவாதிகள் யார், யார் என்பதை அடையாளம் காட்டுவதில் அமெரிக்க படைகள் உதவின என்று அமெரிக்க ராணுவ மத்திய கட்டளைப் பிரிவின் செய்தி தொடர்பாளர் கர்னல் ஜான் தாமஸ் தெரிவித்தார். அவர்கள் அமெரிக்க படையினரால் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அலெக்சாண்டா கோட்டே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஆட்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு பணி ஆற்றி வந்து உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது.
எல் ஷபீ எல்ஷேக்கைப் பொறுத்தமட்டில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டவர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சிறை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் பெயர் பெற்றவர் என தகவல்கள் கூறுகின்றன.