கோப்புப்படம் 
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாதுகாப்புப் படையினரின் 3 ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் ஷவால் பகுதியில் சனிக்கிழமை பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு வீரர் அதில் பலியானார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் மீராம்ஷாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகளை கொண்டு, பயங்கரவாதிகள் வெடித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் காயமின்றி உயிரிபிழைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு