உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39,369 ஆக உயர்வு

இங்கிலாந்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 39,369 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 64,29,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,79,613 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 39,369 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,77,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,35,643 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது