உலக செய்திகள்

பிரிட்டன்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.

தினத்தந்தி

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமக்கிராட்சு கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு