உலக செய்திகள்

இந்திய மக்களுடனான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சுதந்திர தின வாழ்த்து!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.

தினத்தந்தி

லண்டன்,

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் பேசினார். இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கும் இடையே செழித்து வரும் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளதாக எடுத்துரைத்தார்.

அவர் கூறிய வாழ்த்துச் செய்தியில்:- "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள்!

சமீபத்தில் குஜராத் மற்றும் புதுடெல்லிக்கு நான் வந்திருந்தபோது, நம் நாடுகளுக்கு இடையே செழித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாலத்தை நேரில் பார்த்தேன்.இந்த பிணைப்புகள் இருநாட்டு உறவுகள் அடுத்த 75 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சுதந்திர தின வாழ்த்து!வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்."

இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்