கோப்புப்படம்  
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

இங்கிலாந்து முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.

புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, இரு சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவில் கன்சாவேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா. இதில் இங்கிலாந்து முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், மூன்றாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ரிஷி சுனக் உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். வர்த்தக மந்திரி பென்னி மார்டன்ட் 88 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். கெமி படேனோக் 58 வாக்குகள் பெற்றுள்ளார். புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா வரும் செப்டம்பா மாதம் 5-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது