கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,202 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 1,322 பேர் பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.46 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 22.69 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 38,71,825 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,322 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,87,706 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 19,74,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை