கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 38,154 பேருக்கு தொற்று

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 68,62,904 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 351,119 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 55 லட்சத்து 33 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 11,96,757 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்