லண்டன்,
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 48,553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,81,098 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 593 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 80 ஆயிரத்து 030 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 7,72,475 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.