கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிதாக 31,772 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,772 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,21,245 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 58 ஆயிரத்து 554 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 6,34,266 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு