கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இன்று புதிதாக 54,990 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 454 பேர் பலி

இங்கிலாந்தில் இன்று புதிதாக 54,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் லண்டனில் பெரிய மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 50,000 கடந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இன்று புதிதாக 54,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 26,54,779 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 454 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75,024 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்சை பின்னுக்கு தள்ளி, இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்