உலக செய்திகள்

அரசியின் நாடாளுமன்ற உரையை பிரிட்டன் ஒத்தி வைத்தது

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அரசியின் உரையை ஒத்தி வைத்துள்ளது அரசு

லண்டன்

தேர்தல் முடிந்து பெரும்பான்மை பலத்தைப் பெறாததால் கன்சர்வேடிவ் கட்சியில் மட்டுமின்றி அரசியல் ஸ்திரமின்மையால் பீடிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்தில் குழப்ப நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அரசியின் உரையை ஒத்துவைத்ததுள்ளது அரசு. இந்த உரை நிகழ்ச்சி ஜூன் 19 ஆம் தேதியன்று நடைபெறுவதாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றிய பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் துவங்கும் என்று பிரதமர் மே தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளால் அவர் எவ்வாறு இப்பணியை முடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டியே அரசியின் உரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

பொதுவாக அரசியின் உரையில் அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்