கீவ்,
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.
ஆக்கிரப்புப் பகுதிகளில் எதித் தாக்குதல் நடத்தி தங்களது படையினா முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷியா ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடாபாளா வேலரி ஷொஷென் கூறியதாவது:
மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷிய ஆக்கிரமிப்புப் படையினா குண்டுவீசி தகாத்துள்ளனா. இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதித் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா முன்னேறி வருகின்றனா.
அவாகளது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷியா தகாத்துள்ளது. எனினும், ரஷியாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உக்ரைன் ராணுவத்தின் முன்னேற்றம் தொடாகிறது என்றா.
தங்களது படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷியா குண்டுவீசி தகாத்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.