Photo Credit: AFP 
உலக செய்திகள்

ரஷிய எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது.

கீவ்,

உக்ரைன் மீதான ரஷிய போர் இரண்டாவது மாதமாக தொடர்கிறது. இந்த நிலையில், ரஷிய வான்பரப்புக்குள் புகுந்த உக்ரைனின் ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது வான்வழியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷியாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதுதான் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைனின் இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிகிறது.

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களில் இருவர் உக்ரைனின் தாக்குதல் காயம் அடைந்துள்ளனர். 170-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் தாக்குதல் நடத்திய பெல்கோரோட் நகரம் உக்ரைன் - ரஷியா எல்லையில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்