உலக செய்திகள்

உக்ரைன் எல்லை பதற்றம்; பெலாரஸ்-ரஷ்யா இடையே 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்

உக்ரைன் எல்லை பதற்றத்துக்கு மத்தியில் பெலாரஸ் ராணுவத்துடன் ரஷ்யா 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த சூழலில் தற்போது ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. உக்ரைன் நாட்டுடன் நீண்ட தெற்கு எல்லையை கொண்டுள்ள நாடு பெலாராஸ் ஆகும். இந்நிலையில் ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு