உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதம் தர முடியாது - ஹங்கேரி பிரதமர் திட்டவட்டம்

உக்ரைனுக்கு ஆயுதம் தர முடியாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புடாபெஸ்ட்,

ரஷியாவை எதிர்த்து சண்டையிட ஆயுதங்கள் வழங்க வேண்டும், கூடவே ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடான ஹங்கேரிக்கு உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்க அந்த நாடு மறுத்து விட்டது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று சமூக ஊடகம் ஒன்றில் வீடியோ பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்கள், ஹங்கேரியின் நலன்களுக்கு எதிரானவை. ரஷிய எரிசக்திக்கு தடை போட்டால் அது எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மந்தமாக்கும் என கூறி உள்ளார். உக்ரைன் எல்லையில் உள்ள ஹங்கேரி, அந்த நாட்டுக்கு போரிட ஆயுதங்கள் தர மறுத்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்